Friday, 15 December 2017

காப்புரிமை


அவள் தலைத்துவட்டிய
ஈரத்துண்டு..

நீரோவிய காப்புரிமை..

                  - நிலா

ஒருதலை காதல்


அவளுக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து
அவளுடன் பேருந்தில் பயணித்து
அவள் தன்னை காணாதபோது
அவளை கண்டு ரசித்தான்..

ஒருதலை காதல் தொடர்ந்தது
மறுநாளை எதிர்நோக்கி..

#மொக்கெழுத்து

மெண்மை


பெண்மையின் மெண்மையை
அறிய முற்பட்டபோது
ஆணின் அர்த்தத்தை உணர்ந்தேன்..

#மொக்கெழுத்து

சாக்லேட்


அவளுக்கு
சாக்லேட் பரிசளித்தேன்..

இனிப்பின் ஆழத்தை
சாக்லேட் உணர..

                   - நிலா

புத்தகம்


கையில் புத்தகம்
படித்து முடித்தாய்..

படிக்க முயன்று
தோற்றது புத்தகம்..

              - நிலா

Thursday, 14 December 2017

வெற்றி


எனது நிழலுடன் போட்டியிட்டு
வெற்றி கொண்டது
அவளது நினைவுகள்..

                       - நிலா

சிற்பி


தனது அழகை
சீப்பும் கவ்வியும் கொண்டு
செதுக்கும் சிற்பி
பெண்..

                      - நிலா

Wednesday, 29 November 2017

இதழ்கள்


பிரிந்தாலும்
சேர்ந்தாலும்..

படைத்தவனின் கர்வத்தை 
சற்று தூக்கியே நிறுத்துகிறது..

உனது இதழ்கள்..

                    - நிலா 

Tuesday, 28 November 2017

தாவணி


கண்ணாம்பூச்சி விளையாட
தூண்டுகிறது

நீ உடுத்திய தாவணி

                      - நிலா 

Saturday, 25 November 2017

மறுபிறவி


மரணம் என்னை முத்தமிட்டது..

சொர்கத்திற்கு உன்னை வரவேற்கிறேன் 
என்ற இறைவனிடம்..
அவள் எங்கே என்றேன்..

மறுபிறவி பரிசளித்தான்..
சொர்கம் சென்றேன்..

                                  - நிலா 



Thursday, 9 November 2017

நிலா


என்னைப்போலவே
எனது எழுத்துக்களும்
அவளுடனே நிறைவடைய
விரும்பியதால்..

அவளது பெயருடன்
நிறைவு செய்கிறேன்..

எனது கிறுக்கல்களை..

                   - நிலா 

தாய்மை


மறக்க முயன்ற காதலுக்கு 
தாய்மையை பரிசளித்தாள்..

அவளின் செல்ல சிசுவிற்கு
அவன் பெயர் சூட்டி..

                       - நிலா 

தாக்கம்


அவளுடன் உரையாடியபின் 
சில மணித்துளிகள்
ஒலியை நிராகரித்தது 
செவி..

மறுஒலிப்பதிவின் தாக்கம்..

                      - நிலா 

மிதிவண்டி


மிதிவண்டி பழகினாய்
கல்நெய் தீக்குளித்தது

                - நிலா 

மழை


மழைவிட பிராதித்தவர்கள்
விடாமழைக்கு தவமிருந்தனர்

அவளும் மழைக்கு ஒதிங்கியதால்..

                              - நிலா 

தனிமை


அவளை நினைவூட்டும் 
கருவி..

தனிமை..

                 - நிலா 

Tuesday, 7 November 2017

நீளுமா


மழைக்காலம்
அவளுடன் முதல் Coffee 
இக்கணம் ஏழு ஜென்மங்கள் நீளுமா..

நீண்டது
அவளின் ஓர் கண் சிமிட்டலில்..

                                 - நிலா 

Friday, 3 November 2017

சேமிப்பு கணக்கு


அழகை சேமிக்கும்
சேமிப்பு கணக்கு

மையிட்ட உன் கண்கள்..

                   - நிலா 

Saturday, 28 October 2017

முகபுத்தகம்


அவளை பின்தொடர 
வாய்ப்பளித்ததால்

என் முகவரியே நீயானாய்
முகபுத்தகமே.. 

                    - நிலா 

இடமாற்றம்


இடமிருந்து வலம்
சென்றதற்கு..

நடக்கையில் நீ
என் வலது கரம் பிடித்ததே

காரணமாம்..

சொன்னது இதயம்..

                     - நிலா 


முற்றுப்புள்ளி


இறைவனின் கற்பனைக்கு
முற்றுப்புள்ளி நீ

                    - நிலா 

குழம்பு


மீன் குழம்பு
நீ சுவைத்த பின் 
தேன் குழம்பானது

            - நிலா 

தீண்டாமை


காற்றுக்கு 
தீண்டாமை கற்பித்தாள்

பேருந்தில் 
ஜென்னலோரம் அமர்ந்து

முகத்திரை அணிந்து..

                  - நிலா 

Thursday, 19 October 2017

ஏழை தீபாவளி


தெருக்களில்
வெடித்த பட்டாசுகளை
தன் வீட்டு வாசலில்
சேகரித்து மகிழ்ந்தான்
ஏழை சிறுவன்..

                                        - நிலா

#டிஜிட்டல் இந்தியாவிற்கு சமர்ப்பணம்..

கவிதையில்


பத்து வருடங்கள் கழித்து
கண்டேன் அவளை

கவிதையில்..

பிழையும் இல்லை
(ஏ)மாற்றமும் இல்லை

                   - நிலா 

Tuesday, 17 October 2017

Java


நீ வைக்கும் ஒவ்வொரு
Semicolon
Java Statementன் சாபக்கேடு

நீ இயற்றிய Codeல் 
தனது block 
execute ஆகும் ஆசையில்
மரபை மீறிய
IF .. ELSE

                       - நிலா 

Monday, 16 October 2017

GIF


கண் சிமிட்டினாய்..
GIF பிறந்தது..

              - நிலா 

சிலைகள்


நீ கடந்த சாலையில்..
எண்ணற்ற சிலைகள்..

                 - நிலா 


கொலுசு


கொலுசு அணிந்தாய்
உலகம் ஊமையானது..

இசையை எதிர்நோக்கி..

                 - நிலா 

மகள்


உறங்கும்
உன் மகளை காண்..

ஆயிரம் காதல் ஒன்றிணைந்து
உன்னை முத்தமிடுவதாய் உணர்வாய்..

                            - நிலா 


   

Friday, 6 October 2017

நோபெல் பரிசு


B.Sc Maths 
விண்ணப்பித்தாள்..

நோபெல் பரிசு
அறிவிக்கப்பட்டது..

Mathematicsகு..

              - நிலா 


வையம்


உன்னை நினைவூட்டும்
எண்ணற்ற அணுக்களை
ஒன்றினைத்தேன்..

வையம் அணுவானது..

                  - நிலா 

Thursday, 5 October 2017

Robotics


என்னை Roboவாக்கியது 
உனது உதடுகள்..

Robotics பயிலாமலே..

                 - நிலா 

நிலவு ஒளிகிறது


மாதத்தில் 
ஒரு நாள் மட்டும் 
நிலவு ஓடி ஒளிகிறது..

உலகமும்
உன் புகழ் அறியட்டுமென்று..

                         - நிலா 

ஆடை


மழையை 
கொண்டாடுகிறது..

நனைந்த உன் ஆடைகள்..

                     - நிலா 

Monday, 2 October 2017

STUNனானது


உனது இடது உள்ளங்கை
STUNனானது

நீ
சமைத்தபின்
உப்பு காரம்
சரி பார்த்ததால்..

                   - நிலா 

SYNONYMS


தாய்ப்பாலின்
SYNONYMS நீ..

       - நிலா 

நிச்சயிக்கப்பட்டதால்


பட்டுப்பூச்சிகள்
தற்கொலைக்கு தயாரானது..

உன் திருமண நாள்
நிச்சயிக்கப்பட்டதால்..

                       - நிலா




HANGஆனது


நகல் எந்திரம்
HANGஆனது..

உனது அடையாள அட்டையினால்..

                              - நிலா 


Friday, 22 September 2017

நடை


சொர்க்கத்தின் பரப்பளவு
அதிகரிக்கிறது..

நீ நடக்கையில்..

                   - நிலா 


பாதணி


உனது பாதணி..
பூமிக்கு செருப்படி..

             - நிலா


உனது அறை


சுவரெங்கும்
உனது நிழற்படங்கள்..

அழகிய அருங்காட்சியகம் AWARD
வழங்கப்பட்டது..

உனது அறைக்கு..

                          - நிலா 


Thursday, 21 September 2017

Brain scan


Brain scan செய்தேன்..

அறிக்கையில்
உனது SELFIE..

                 - நிலா 


Friday, 15 September 2017

பெண்மையின் பெருமை


பெண்மையின் பெருமையை கூறுக..
என்ற வினாவிற்கு..

Attach செய்தேன்
உனது BIO-DATA'வை..

                                - நிலா 


Thursday, 14 September 2017

முத்தங்கள்


தேடினேன்..
தொலைந்தது..

உனது நெற்றியில்
நான் புதைத்த முத்தங்கள்..

                      - நிலா 


Tuesday, 12 September 2017

கண்ணீர்


கண்ணீரில் 
காதல் கரையுமென
நம்பினேன்..

நீரோ..

வேரின் காதலை
உணர்த்தியது.. 

              - நிலா 

நாள்காட்டி


திங்கட்கிழமைக்காக
காத்திருந்தது
அலுவுலக நாள்காட்டி..

நாட்களும்
உன்னோடு 
நடைபோட விரும்பியதால்..

                      - நிலா 

கடிகாரம்


கடிகாரம் 
கவனிக்கப்படுகிறது..

உன்னுடன் பணியாற்றிய 
நாட்களின் 
இரவு நேரங்களில்..

                    - நிலா 



கண்தானம்


கண்தானத்தின் அவசியத்தை
எண்ணிய இறைவன்..
படைத்தான் உன்னை..

அடுத்தடுத்த தலைமுறையையும்
எண்ணினான்..
படைத்தான் நிழற்படவியை..

                           - நிலா 

மாயை


பல magic-show சென்றும்
வராதது..

நீ 
உன் இடது கை விரல்களால் 
உன் கூந்தலை 
சரி செய்ததும் வந்தது..

Magic'ன் மேல் நம்பிக்கை..  

                       - நிலா 

Sunday, 6 August 2017

மெட்டி


உனது மெட்டிக்கு 
நன்றி சொல்ல விரும்பியது 
எனது நட்பு..

நட்பின் அளவை தாண்டியும்
நட்போடு பழக வாய்ப்பளித்தற்கு..

                             - நிலா 

உலகின் பாவம்


நீ 
கண் சிமிட்டும் நேரம்..
இந்த உலகம் செய்த பாவம்..

                        - நிலா 


Thursday, 3 August 2017

ஊமை


நீ 
என்னை 
ஊமையென்றாய்..

உண்மைதான்..

உன்னை பற்றியேயய
எந்நேரமும் பேசிய எனக்கு 
உன்னோடு மட்டும் ஏனோ??? 

                       - நிலா 

Tuesday, 1 August 2017

பொய்த்தது கண்ணாடி


நீ அழகன் என்றாள்..
பொய்த்தாள்
புன்னகைத்தேன்
கான் கண்ணாடியை என்றாள்..

கண்ணாடி முன் 
அழகான நான்..

பொய்த்தது கண்ணாடியும்
அவளின் பொய்யை தொலைக்க.. 

                            - நிலா 



பூகம்பம்


உன்னை ஒப்பிட்டு 
கவிதை எழுத எண்ணியபோது..

அனைத்து Object-களும் அதிர்ந்து
தனது Presence'ஐ
முன்னிறுத்தியது..

பூகம்பம் என பெயரிடப்பட்டது..

                          - நிலா 

உயிரே நீதான்


உயிரே நீதான் என்றாள்..
மகிழ்ச்சியில் மறந்தேன்
என்னையும்
வாகனத்தில் நான் சென்றதையும்..
மரணம் என்னை முத்தமிட்டது..

உண்மைதான்..
உனது கல்லறையில்
எனது ஆத்மா..

                           - நிலா 

நாத்திகம்


கோயிலுக்கு செல்லும் 
வழிதான் கேட்டாள்..

நாத்திகத்தை
தூக்கி எறிந்தது அகராதி..

                    - நிலா 

Wednesday, 19 July 2017

அழகின் உச்சம்


என் முன் நீ
என்னுள் நீ
அழகின்-உச்சம்
இப்போது நான்-தான்!!


சொன்னது கண்ணாடி..


                  - நிலா



Thursday, 9 March 2017

தடுமாற்றம்


தண்ணீர்
தடுமாறுகியது!! 

உனது குளியலறையில்..

                 - நிலா


மரம்


நீ சுற்றிய மரத்திற்கு 
தலை சுற்றியது..

              - நிலா


போர்க்களம்


போர்க்களம் காண
ஆசை என்றாய்..

அறிவிக்க தொடங்கினேன்..
உன் கண்ணாடியின்
ஆரம்ப விலை *****

                      - நிலா


Wednesday, 8 March 2017

பெண்மை


அவளுக்கு
அர்த்தங்கள் ஆயிரம்..
ஆயிரமும் அற்புதமானவை..

                       - நிலா

  உலகை
பழிவாங்க நினைத்தால்..
பெண்ணின்
படைப்பை நிறுத்துவான்..
இறைவன்..

                    - நிலா 


Sunday, 26 February 2017

வெற்றியின் வெட்கம்


நீ congrats என்றதும்,
வென்றதற்கு வெட்கப்-பட்ட 
உலகழகி.. 

                     - நிலா

Goggles..

சரிக்கினேன்
உன் விரல் சரி செய்யுமென்று..
சரி செய்தது..

மனமில்லை மறுமுறை,
அமர்க்கை அப்படி!
Goggles..

                          - நிலா  

Sunday, 19 February 2017

Standing Ovation


எழுத்துக்கள் 
Standing Ovation செய்கிறது,
உன்னை எழுதும்-போதெல்லாம்

                          - நிலா 

மொழிப்போர்


ஆங்கிலத்தில் உன் பெயர்..
விளைவு
247ம் தற்கொலை முயற்சி.. 

                      - நிலா