Saturday, 6 January 2018

விழிகள்


எனை பிரிகையில்
நீரோவியமானது அவள் விழிகள்..

            - நிலா

கருவறை


அவளது மடியில் உறங்கையில்..
கருவறை வாசம்.. 

                           - நிலா

விண்ணப்பம்


தனது சந்தை மதிப்பை கூட்ட
அவளுடன் ஒப்பிட்டு எழுத
விண்ணப்பித்தது நிலவு

                       - நிலா

பெருமை


ஒட்டி பிறந்த அழகையும் கர்வத்தையும்
பிரித்த பெருமை
அழகி அவளையே சேரும்..

                                  - நிலா

பிழை


அவளது ஒற்றை பிழை 
பிழையில்லா அவளே..

                   - நிலா