Sunday, 9 September 2018


விரல்பிடித்து இழுத்துசென்று
இருயுக மகிழ்வை
உறுதிசெய்கிறாய் 
நடைப்பழகி..

                        - நிலா 

Wednesday, 5 September 2018

முற்றுப்புள்ளி


கண்சிமிட்டலுக்கு 
முற்றுப்புள்ளி வைக்கிறாய்

எதிரே நின்று..

                    - நிலா 

வாக்குமூலம்


உன்னையே காட்டியதாம் கண்கள்
மரணத்தின் வாக்குமூலம்..  

                             - நிலா 

களவு


உயிர் களவு போகட்டும்
உனை தீண்டிய காற்று
எனை தீண்டும் வரை.. 

                   - நிலா

விவசாயி


தன்னை தாங்க
செருப்பும் இல்லை

உலகின் பசி தாங்க
வெயில் வயலில்
இறங்கினான் விவசாயி..

                                             - நிலா

பூங்காற்று


பூக்களை செல்லமாய் அடித்து
நடனம் பழக்குகிறாள்
பூங்காற்று

                   - நிலா

மெய்நிகர்


கற்றேன்
மெய்நிகர் உண்மையை
நீயில்லா பயணத்தில்..

                       - நிலா

குறைகள்


எத்தனை குறைகள் என்னவளிடம்!
இருப்பினும்

ஒப்பிடக்கூட முடியாது
எவளுடனும்..

                            - நிலா

இளைப்பாறு


காற்றே சற்று இளைப்பாறு
அவள் எழாமல்
ஜன்னல் திறவாது..

                    - நிலா

Friday, 9 February 2018

பாதணி


அவளிடமில்லா திமிரை
அவளை சுமக்கும்
அவளது பாதணி சுமக்கிறதே..

                         - நிலா

எழுத்துப்பிழை


வள்ளுவன் உனை கண்டுருந்தால்
எழுத்துப்பிழைக்கு கூச்சம் கொள்ளாமல்
உன் குரலை களவாடியிருப்பான்..

                                   - நிலா

பூங்கொத்து


அவள் கொண்ட
ரோஜா பூங்கொத்தில்
ஒற்றை மோதிரம்..

               - நிலா

சொத்து


அசையும் சொத்து அவளை
காணும் விழிகள்
அசையா சொத்தாய்.. 

                     - நிலா

தினம் தினம்


தினம் தினம்
அவளோசையில் கண் விழிக்க..
நாடினேன் எழுப்போசையை..

                          - நிலா

Saturday, 6 January 2018

விழிகள்


எனை பிரிகையில்
நீரோவியமானது அவள் விழிகள்..

            - நிலா

கருவறை


அவளது மடியில் உறங்கையில்..
கருவறை வாசம்.. 

                           - நிலா

விண்ணப்பம்


தனது சந்தை மதிப்பை கூட்ட
அவளுடன் ஒப்பிட்டு எழுத
விண்ணப்பித்தது நிலவு

                       - நிலா

பெருமை


ஒட்டி பிறந்த அழகையும் கர்வத்தையும்
பிரித்த பெருமை
அழகி அவளையே சேரும்..

                                  - நிலா

பிழை


அவளது ஒற்றை பிழை 
பிழையில்லா அவளே..

                   - நிலா