Friday, 15 December 2017

காப்புரிமை


அவள் தலைத்துவட்டிய
ஈரத்துண்டு..

நீரோவிய காப்புரிமை..

                  - நிலா

ஒருதலை காதல்


அவளுக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து
அவளுடன் பேருந்தில் பயணித்து
அவள் தன்னை காணாதபோது
அவளை கண்டு ரசித்தான்..

ஒருதலை காதல் தொடர்ந்தது
மறுநாளை எதிர்நோக்கி..

#மொக்கெழுத்து

மெண்மை


பெண்மையின் மெண்மையை
அறிய முற்பட்டபோது
ஆணின் அர்த்தத்தை உணர்ந்தேன்..

#மொக்கெழுத்து

சாக்லேட்


அவளுக்கு
சாக்லேட் பரிசளித்தேன்..

இனிப்பின் ஆழத்தை
சாக்லேட் உணர..

                   - நிலா

புத்தகம்


கையில் புத்தகம்
படித்து முடித்தாய்..

படிக்க முயன்று
தோற்றது புத்தகம்..

              - நிலா

Thursday, 14 December 2017

வெற்றி


எனது நிழலுடன் போட்டியிட்டு
வெற்றி கொண்டது
அவளது நினைவுகள்..

                       - நிலா

சிற்பி


தனது அழகை
சீப்பும் கவ்வியும் கொண்டு
செதுக்கும் சிற்பி
பெண்..

                      - நிலா