My Mad Magic World
My imaginations, My rules & My definitions
Wednesday, 29 November 2017
இதழ்கள்
பிரிந்தாலும்
சேர்ந்தாலும்..
படைத்தவனின் கர்வத்தை
சற்று தூக்கியே நிறுத்துகிறது..
உனது இதழ்கள்..
- நிலா
Tuesday, 28 November 2017
தாவணி
கண்ணாம்பூச்சி விளையாட
தூண்டுகிறது
நீ உடுத்திய தாவணி
- நிலா
Saturday, 25 November 2017
மறுபிறவி
மரணம் என்னை முத்தமிட்டது..
சொர்கத்திற்கு உன்னை வரவேற்கிறேன்
என்ற இறைவனிடம்..
அவள் எங்கே என்றேன்..
மறுபிறவி பரிசளித்தான்..
சொர்கம் சென்றேன்..
- நிலா
Thursday, 9 November 2017
நிலா
என்னைப்போலவே
எனது எழுத்துக்களும்
அவளுடனே நிறைவடைய
விரும்பியதால்..
அவளது பெயருடன்
நிறைவு செய்கிறேன்..
எனது கிறுக்கல்களை..
- நிலா
தாய்மை
மறக்க முயன்ற காதலுக்கு
தாய்மையை பரிசளித்தாள்..
அவளின் செல்ல சிசுவிற்கு
அவன் பெயர் சூட்டி..
- நிலா
தாக்கம்
அவளுடன் உரையாடியபின்
சில மணித்துளிகள்
ஒலியை நிராகரித்தது
செவி..
மறுஒலிப்பதிவின் தாக்கம்..
- நிலா
மிதிவண்டி
மிதிவண்டி பழகினாய்
கல்நெய் தீக்குளித்தது
- நிலா
மழை
மழைவிட பிராதித்தவர்கள்
விடாமழைக்கு தவமிருந்தனர்
அவளும் மழைக்கு ஒதிங்கியதால்..
- நிலா
தனிமை
அவளை நினைவூட்டும்
கருவி..
தனிமை..
- நிலா
Tuesday, 7 November 2017
நீளுமா
மழைக்காலம்
அவளுடன் முதல் Coffee
இக்கணம் ஏழு ஜென்மங்கள் நீளுமா..
நீண்டது
அவளின் ஓர் கண் சிமிட்டலில்..
- நிலா
Friday, 3 November 2017
சேமிப்பு கணக்கு
அழகை சேமிக்கும்
சேமிப்பு கணக்கு
மையிட்ட உன் கண்கள்..
- நிலா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)