Saturday, 28 October 2017

முகபுத்தகம்


அவளை பின்தொடர 
வாய்ப்பளித்ததால்

என் முகவரியே நீயானாய்
முகபுத்தகமே.. 

                    - நிலா 

இடமாற்றம்


இடமிருந்து வலம்
சென்றதற்கு..

நடக்கையில் நீ
என் வலது கரம் பிடித்ததே

காரணமாம்..

சொன்னது இதயம்..

                     - நிலா 


முற்றுப்புள்ளி


இறைவனின் கற்பனைக்கு
முற்றுப்புள்ளி நீ

                    - நிலா 

குழம்பு


மீன் குழம்பு
நீ சுவைத்த பின் 
தேன் குழம்பானது

            - நிலா 

தீண்டாமை


காற்றுக்கு 
தீண்டாமை கற்பித்தாள்

பேருந்தில் 
ஜென்னலோரம் அமர்ந்து

முகத்திரை அணிந்து..

                  - நிலா 

Thursday, 19 October 2017

ஏழை தீபாவளி


தெருக்களில்
வெடித்த பட்டாசுகளை
தன் வீட்டு வாசலில்
சேகரித்து மகிழ்ந்தான்
ஏழை சிறுவன்..

                                        - நிலா

#டிஜிட்டல் இந்தியாவிற்கு சமர்ப்பணம்..

கவிதையில்


பத்து வருடங்கள் கழித்து
கண்டேன் அவளை

கவிதையில்..

பிழையும் இல்லை
(ஏ)மாற்றமும் இல்லை

                   - நிலா 

Tuesday, 17 October 2017

Java


நீ வைக்கும் ஒவ்வொரு
Semicolon
Java Statementன் சாபக்கேடு

நீ இயற்றிய Codeல் 
தனது block 
execute ஆகும் ஆசையில்
மரபை மீறிய
IF .. ELSE

                       - நிலா 

Monday, 16 October 2017

GIF


கண் சிமிட்டினாய்..
GIF பிறந்தது..

              - நிலா 

சிலைகள்


நீ கடந்த சாலையில்..
எண்ணற்ற சிலைகள்..

                 - நிலா 


கொலுசு


கொலுசு அணிந்தாய்
உலகம் ஊமையானது..

இசையை எதிர்நோக்கி..

                 - நிலா 

மகள்


உறங்கும்
உன் மகளை காண்..

ஆயிரம் காதல் ஒன்றிணைந்து
உன்னை முத்தமிடுவதாய் உணர்வாய்..

                            - நிலா 


   

Friday, 6 October 2017

நோபெல் பரிசு


B.Sc Maths 
விண்ணப்பித்தாள்..

நோபெல் பரிசு
அறிவிக்கப்பட்டது..

Mathematicsகு..

              - நிலா 


வையம்


உன்னை நினைவூட்டும்
எண்ணற்ற அணுக்களை
ஒன்றினைத்தேன்..

வையம் அணுவானது..

                  - நிலா 

Thursday, 5 October 2017

Robotics


என்னை Roboவாக்கியது 
உனது உதடுகள்..

Robotics பயிலாமலே..

                 - நிலா 

நிலவு ஒளிகிறது


மாதத்தில் 
ஒரு நாள் மட்டும் 
நிலவு ஓடி ஒளிகிறது..

உலகமும்
உன் புகழ் அறியட்டுமென்று..

                         - நிலா 

ஆடை


மழையை 
கொண்டாடுகிறது..

நனைந்த உன் ஆடைகள்..

                     - நிலா 

Monday, 2 October 2017

STUNனானது


உனது இடது உள்ளங்கை
STUNனானது

நீ
சமைத்தபின்
உப்பு காரம்
சரி பார்த்ததால்..

                   - நிலா 

SYNONYMS


தாய்ப்பாலின்
SYNONYMS நீ..

       - நிலா 

நிச்சயிக்கப்பட்டதால்


பட்டுப்பூச்சிகள்
தற்கொலைக்கு தயாரானது..

உன் திருமண நாள்
நிச்சயிக்கப்பட்டதால்..

                       - நிலா




HANGஆனது


நகல் எந்திரம்
HANGஆனது..

உனது அடையாள அட்டையினால்..

                              - நிலா