My Mad Magic World
My imaginations, My rules & My definitions
Sunday, 6 August 2017
மெட்டி
உனது மெட்டிக்கு
நன்றி சொல்ல விரும்பியது
எனது நட்பு..
நட்பின் அளவை தாண்டியும்
நட்போடு பழக வாய்ப்பளித்தற்கு..
- நிலா
உலகின் பாவம்
நீ
கண் சிமிட்டும் நேரம்..
இந்த உலகம் செய்த பாவம்..
- நிலா
Thursday, 3 August 2017
ஊமை
நீ
என்னை
ஊமையென்றாய்..
உண்மைதான்..
உன்னை பற்றியேயய
எந்நேரமும் பேசிய எனக்கு
உன்னோடு மட்டும் ஏனோ???
- நிலா
Tuesday, 1 August 2017
பொய்த்தது கண்ணாடி
நீ அழகன் என்றாள்..
பொய்த்தாள்
புன்னகைத்தேன்
கான் கண்ணாடியை என்றாள்..
கண்ணாடி முன்
அழகான
நான்..
பொய்த்தது கண்ணாடியும்
அவளின் பொய்யை தொலைக்க..
- நிலா
பூகம்பம்
உன்னை ஒப்பிட்டு
கவிதை எழுத எண்ணியபோது..
அனைத்து Object-களும் அதிர்ந்து
தனது Presence'ஐ
முன்னிறுத்தியது..
பூகம்பம் என பெயரிடப்பட்டது..
- நிலா
உயிரே நீதான்
உயிரே நீதான் என்றாள்..
மகிழ்ச்சியில் மறந்தேன்
என்னையும்
வாகனத்தில் நான் சென்றதையும்..
மரணம் என்னை முத்தமிட்டது..
உண்மைதான்..
உனது கல்லறையில்
எனது ஆத்மா..
- நிலா
நாத்திகம்
கோயிலுக்கு செல்லும்
வழிதான் கேட்டாள்..
நாத்திகத்தை
தூக்கி எறிந்தது அகராதி..
- நிலா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)